search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோட்டக்கலை அதிகாரி"

    • சிறு கிழங்கு விவசாயிகளின் நண்பன். இதன் உற்பத்தி குறைவாக இருப்பதால் சந்தையில் விலை சற்று கூடுதலாக இருக்கும்.
    • அண்டை மாநிலமான கேரளாவில் அதிக தேவை இருப்பதால் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் அறுவடையாகும்.

    கடையம்:

    கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஞானசேகரன் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சிறு கிழங்கு விவசாயி களின் நண்பன். மணமும் சுவையும் நுகர்வோரை கவரக்கூடியது இக்கிழங்கு. இதன் உற்பத்தி குறைவாக இருப்பதால் சந்தையில் விலை சற்று கூடுதலாக இருக்கும்.

    அண்டை மாநிலமான கேரளாவில் அதிக தேவை இருப்பதால் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் அறுவடையாகும். புரதம் மற்றும் தாதுக்கள் நிரம்பி இருக்கும் இந்த சிறுகிழங்குகள், மருத்துவ பலன்கள் அதிகம் கொண்ட காரணங்களினால் அரபு நாடுகள், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை நட்ட 2 மாதங்கள் கழித்து எக்டேருக்கு 30 கிலோ தழைசத்து, 60 கிலோ மணிச்சத்து, 150 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை இடவேண்டும். நட்ட இரண்டு மாதங்கள் கழித்து மண் அணைக்க வேண்டும்.

    பயிர் பாதுகாப்பு

    சிறு கிழங்கு நன்றாக வளர்ந்து வரும் நேரத்தில் மழை பெய்து குளிர்ந்த காலநிலை வரும்போது நூற்புழுக்கள் தாக்கி தவளைக் கிழங்கு உண்டாகும் அபாயம் உண்டு. நூற்புழு தாக்கிய செடிகளின் வேர்களில் முடிச்சுகள் உண்டாகி, வளர்ச்சி குன்றி செடிகள் குட்டை ஆகிவிடுகின்றன. கண்ணுக்கு தெரியாத நூற்புழுக்கள் நாற்றுப்பருவத்திலேயே செடிகளின் வேர்களின் உள்ளே சென்று விடுவதால் புழு தாக்காத நாற்றுகளை மட்டுமே நட வேண்டும்.

    நூற்புழுக்கள் தாக்குதலை தாங்கி வளரக்கூடிய ரகமான ஸ்ரீதாரா ரகத்தை நடவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    தருமபுரியில் திருமணம் ஆன 19 நாளில் தோட்டக்கலை அதிகாரி விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி , பாரதிபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் விஜயராஜன். இவர் தருமபுரியில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றினார். இவருக்கும் மெய்சேரி அடுத்த கட்ட புளியமரம் பகுதியை சேர்ந்த சுகுணா என்பவருக்கும் திருமணம் ஆகி 19 நாட்களே ஆகிறது.

    நேற்றிரவு தனது மோட்டார் சைக்கிளில் கட்ட புளியமரம் கிராமத்தில் இருந்து மனைவியை அழைத்து கொண்டு பாரதி புரத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

    பாளையம் புதூர் அருகே பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது இவரது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணவன், மனைவி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே விஜயராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். சுகுணாவுக்கு கால் முறிந்தது. அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×